குட்டீஸ் கைவண்ணத்தில் கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ
திருப்பூர் : திருப்பூரில் நடந்த கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போவில், ஏராளமான குட்டீஸ்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்தனர்.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில், கிட்ஸ் பிஸ்னஸ் எக்ஸ்போ-2025 நேற்று நடந்தது.
இங்கு ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. எக்ஸ்போவில், பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த குட்டீஸ்கள் தங்கள் கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், அலங்கார பொருட்கள், வளையல், கம்மல், டிராயிங், விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பலவற்றை விற்பனை செய்தனர். எக்ஸ்போவில், ஏராளமானோர் பங்கேற்று, தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement