தி.மு.க., பாக முகவர்கள் ஆய்வுக் கூட்டம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க., பாக முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி ராதாபுரத்தில் நடந்த கிழக்கு ஒன்றிய பாக முகவர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை வரவேற்றார்.
தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் கலந்து கொண்டு பாகமுகவர்களை ஆய்வு செய்து பேசினார்.
மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் முரளி,மாவட்ட கவுன்சிலர் மீனாவெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, இலக்கிய அணி கலைச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் ,நகர மாணவரணி யுவராஜ் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.