வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக். 29 முதல் நவ. 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன.
பெயர் சேர்ப்பதற்காக, 33,587 பேரிடம் படிவம் - 6; பெயர் நீக்குவதற்காக, 18,019 படிவம் - 7; முகவரி, மொபைல் எண் உள்பட திருத்தங்களுக்காக, 30,461 பேரிடம் படிவம் - 8 என, மொத்தம் 82 ஆயிரத்து 67 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடுதேடிச் சென்று, சுருக்கமுறை திருத்தத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டனர். சரிபார்ப்பு முடிந்து தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன; இருமுறை பதிவு, உரிய ஆவணங்கள் இல்லாத சில விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், காலை, 10:00 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ், வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிடுகிறார்.