இன்று தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தைவேலு தலைமை வகித்தார். பெண்களுக்கு


இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் 6ம் தேதி(இன்று) குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement