மாரத்தான் ஓட்ட போட்டி: கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார் : கடலுாரில், அண்ணாதுரை மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடலுார், அக்சரா பள்ளி அருகே மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி கடலுார் சாவடி அக் ஷரா வித்யாசரம் மெட்ரிக்கு பள்ளியில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. போட்டி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., துாரம், பெண்களுக்கு 5 கி.மீ., துாரம், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. துாரம், பெண்களுக்கு 5 கி.மீ., துாரத்திற்கு போட்டி நடந்தது.

போட்டிகளில் வெற்றிபெறும் அனைத்துப் பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ.5,000; 2ம் பரிசு ரூ.3,000; 3ம் பரிசு ரூ.2,000; 4 முதல் 10 வரை பரிசுத்தொகை தலா ரூ. 1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement