சாலை பாதுகாப்பு வாரம் துண்டு பிரசுரம் வழங்கல்

விருத்தாசலம் : தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், முருகன் முன்னிலை வகித்தனர்.

அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிய வேண்டும். இருவருக்கு மேல் பயணிக்க கூடாது. காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். வளைவில் முந்தி செல்லக் கூடாது. சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, பஸ் நிலையத்தில் பஸ் மற்றுமு் ஆட்டோ ஓட்டுனர்களிடம் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கினர்.

Advertisement