பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

அரியாங்குப்பம், : அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பை பாஸ்கர் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு வழங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட, தேங்காய்த்திட்டு பகுதிகள் மற்றும் வீராம்பட்டினம் ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகையொட்டி, எம்.எல்.ஏ.,வின் சொந்த செலவில், அரிசி உள்ளிட்ட பரிசு பொருட்களின் தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது. தேங்காய்த்திட்டில், பாஸ்கர் எம்.எல்.ஏ., பொங்கல் பொருட்களை பொதுமக்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement