நீர்நிலை பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மூலாதாரமாக விளங்குவது நீர் நிலைகள். அதனால், இச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துடவும், மாநிலத்தின் நீர் வளத்தைப் பெருக்கிடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்களான பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளை கவுரவித்து, நீர் நிலைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தை மக்களிடையே விதைத்திடவும் மாவட்டத்திற்கு ஒருவருக்கு நீர்நிலைப் பாதுகாவலர் விருது மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதி உடையவர்கள், “தமிழ்நாடு விருதுகள்“ வலைதளம் மூலம் வரும் 17 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விருது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் http://www.environment.tn.gov.in/ மற்றும் https://tnclimatechangemisslon.In/home/ ஆகிய வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்குத் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, எண்1, ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரியிலும், http: /www.environment.tn.gov.in/, https://tnclimatechangemission.in/ வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement