வேளாண் பயிற்சி அனுபவ துவக்க விழா 

கடலுார் : குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கண்ணாடி ஊராட்சியில் அண்ணாமலை பல்கலை வேளாண் புல இறுதியாண்டு மாணவர்களின் வேளாண் பயிற்சி அனுபவ துவக்க விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் தனுசு தலைமை தாங்கினார். ரங்கநாதபுரம் தொடக்க வேளாண கூட்டுறவு வங்கி செயலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். அருண்மொழிவர்மன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலை வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள், அப்பகுதி விவசாயிகளிடம் வேளாண் சார்ந்த நவீன தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், வேளாண் தொழிலில் உள்ள நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து விசாயிகளிடம், மாணவர்கள் கேட்டறிந்தனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுள் வழங்கப்பட்டது.

Advertisement