பிராமணர் சங்கத்தில் கோலப்போட்டி 

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், மஞ்சக்குப்பம் கிளை சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு கோலப் போட்டி நடந்தது.

திருவந்திபுரத்தில் நடந்த போட்டிக்கு சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, அரிசி மாவினால் கோலமிடுவதன் சிறப்புகளை விளக்கினார். தொடர்ந்து, கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஜயராகவன், முன்னாள் வங்கி அதிகாரி பாபு வாழ்த்தி பேசினர். மாணவி சுவேதா நன்றி கூறினார்.

Advertisement