சாலை வரியை குறையுங்கள் லாரி உரிமையாளர் எதிர்பார்ப்பு

அவிநாசி : அவிநாசியில், பாரத் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் நல சங்க மாநில மாநாடு, மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தன்ராஜ், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் யுவராஜ், சென்னை மெட்ரோபாலிட்டன் முகவர் சங்க தலைவர் ஜெயக்குமார், அப்துல்காதர், அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உயர்த்தப்பட்ட சாலை வரியை குறைத்தல், காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்றுதல், நிதி நிறுவனங்கள் வெளிமாநில வாகனங்களை தவணைத் தொகைக்காக பறிமுதல் செய்வதை கண்டித்தல், வாகன உரிமையாளர் அல்லது டிரைவர் ஒப்புதல் இன்றி ஆன்லைனில் அபராதம் விதிப்பதை நிறுத்துதல், மூன்றாம் நபர் காப்பீடு தொகையை குறைந்தபட்ச தொகையாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement