சமத்துவ பொங்கல் விழா தி.மு.க., ஆலோசனை

திருக்கனுார்: சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது தொடர்பாக தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செந்தில்வேலன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், கலைவாணன், இளஞ்செழியப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்த ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா வை வரும் 13ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார் மாரியம்மன் கோவில் திடலில் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement