வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 26வது பட்ட மளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி னார். செயலாளர் ராமநாதன் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சென்னை பைசர் ஜெல்த்கேர் நிறுவன முதுநிலை மேலாளர் சத்திய சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 71 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் தாய் தந்தையை மதிக்க வேண்டும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையை விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.
கடின உழைப்பும், திறமையும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம் என, அறிவுரை வழங்கினார்.
கல்லுாரி தாளாளர் சரவணன் பேசுகையில், பட்டம் பெரும் மாணவர்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும், பிறருக்கு வழிகாட்டியாக வாழ வேண்டும் என கூறி மாணவர்களை வாழ்த்தினார்.
பின்னர் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.