கோவில் பூசாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி

கடலுார் : பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டையில் கிராம கோவில் பூசாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் தனசேகரன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராம்குமார், தர்ம சாகரம் அமைப்பின் தலைவர் கணபதி, நாராயணன், சபேசன், மேல்மலையனுார் பாதயாத்திரை குழு அமைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்குடி ஸ்தபதி பரமகுரு, கோவில் பூசாரிகள் முன்னேற்றத்தைப் பற்றியும், பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாடு குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், ஆர்.எஸ்.எஸ்., சமுதாய நல்லிணக்க பேரவை பொறுப்பாளர் குருசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.

விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பூசாரிகள் பங்கேற்றனர். கிராம பூசாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் தீனதயாளன் நன்றி கூறினார்.

Advertisement