தாமதமின்றி ஆருத்ரா தரிசனம் தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசன விழா, தாமதமின்றி நடத்த வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரத்தில், தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். பொதுச் செயலர் ராஜசேகர் வரவேற்றார்.
நிர்வாகிகள் செல்வகுமார், சம்பந்தமூர்த்தி, பிரபு, ரவி, விக்னேஸ்வரன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில். சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ விழா நாட்களில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர, மற்ற நேரங்களில், கனகசபை மீது ஏறி, தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, பொது தீட்சிதர்கள் நிர்வாகம், தரிசன விழா தாமதமின்றி நடத்திட வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக அவசர சிகிச்சை முதலுதவி மையம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.