இடப்பிரச்னையில் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே இடப்பிரச்னை சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமானந்தம்,44; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து,45; என்பவருக்கும் இடப்பிரச்னை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பரமானந்தம் அண்ணி வேல்விழி புதியதாக வீடு கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த முத்து மனைவி ராதா இடித்து கொண்டு சென்றார். இதை கண்டித்த வேல்விழியிடம், ராதா தகராறு செய்தார்.இதை பரமானந்தம் கண்டிக்கவே, ஆத்திரமடைந்த முத்து, இவரது மனைவி ராதா, மகன் வெற்றி, உறவினர் தனுஷ் ஆகியோர்களுக்கும், பரமானந்தம், அண்ணன் தனசேரகன், வேல்விழி, மணிமாறன் ஆகியவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதில் பரமானந்தம், முத்து ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் பரமானந்தம், முத்து ஆகிய இருவரும் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement