கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது புதுக்குப்பம் ஏரிக்கரை சாலையில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் திரிந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், செம்பியப்பாளையம் ஏம்பலம் மெயின்ரோட்டைச் சேர்ந்த தாஸ் (எ) தசரதன், 21, என, தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement