புதுச்சேரி மாநில வளர்ச்சியை குட்டிச்சுவராக்கியவர் நாராயணசாமி அ.தி.மு.க., அன்பழகன் காட்டம்
புதுச்சேரி : புதுச்சேரிமாநில வளர்ச்சியை குட்டிச்சுவராக்கி இருண்ட ஆட்சியை கொடுத்த நாராயணசாமிக்கு பிறர் ஆட்சியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என,அ.தி.மு.க., மாநிலசெயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரிமாநில வளர்ச்சியை குட்டிச்சுவராக்கி இருண்ட ஆட்சியை கொடுத்த நாராயணசாமிக்கு பிறர் ஆட்சியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
தமிழகத்தில் தமிழ் பெண்ணுக்கு நடந்த மகா கொடுமை பற்றி வாய் திறந்தால்கூட்டணி கட்சியான தி.மு.க., கோபித்துக்கொள்ளும் என, வாய் திறக்காமல் உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் அறையில், 6 புரோக்கர்கள் இருப்பதாக இதுவரை, 60 முறை, அவர்கூறி இருக்கிறார்.ஆனால் அவர்கள்யார் யார் என்பதை சொல்லும் தைரியம் அவருக்குஉண்டா?
புதுச்சேரியை ஆளும் அரசு இதுவரை, 2 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக வெற்று விளம்பரத்திற்காக பேசுபவர், ஆதாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டையாவது வெளியில் சொல்ல முடியுமா?
காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் விலைக்கு வாங்க அவரது ஆட்சியின் போது பேச்சுவார்த்தை துவக்கப்பட்டதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.அவர்நினைத்திருந்தால் அதானி நிறுவனம் காரைக்கால் துறைமுகத்தை விலைக்கு வாங்குவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
அவரதுமவுனம் இன்றைக்கு லாபத்துடன் இயங்கும் மின்துறையை விலைக்கு வாங்கும் அளவிற்கு வந்திருக்கிறது.
இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.