மத்திய அமைச்சருக்கு ஆசி வழங்கிய முதல்வர்

புதுச்சேரி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விபூதி பூசி ஆசி வழங்கினார்.

புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று மதியம் வந்தார்.

முன்னதாக கவர்னர் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, மதியம் 2:30 மணிக்கு திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.

அங்குள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் சுவாமி தரிசனம் செய்தார். முதல்வர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய அமைச்சருக்கு விபூதி பூசி ஆசி வழங்கினார். அதன்பின்பு, முதல்வர் வீட்டில் ரங்கசாமியுடன் மத்திய அமைச்சர் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement