ஏனாமில் 23வது காய்கனி மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது

புதுச்சேரி : ஏனாமில் 23வது, காய்கனி மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது.

வேளாண்மை துறை சார்பில், ஏனாமில், 23வது காய்கனி, மலர் கண்காட்சி இன்று 6ம் தேதி, மாலை துவங்குகிறது.

கண்காட்சி ஏற்பாடுகளை, வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டனர்.

கண்காட்சி துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், நாளை 7ம் தேதி, கால்நடைத்துறை சார்பில் மானிய விலையில் கறவை மாடுகள், சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

வரும் 8ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement