செல்லம்பட்டியில் மழைச்சேதம்

மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் டிச. 11 முதல் 15 வரை பெய்த தொடர் மழை, காற்றால்அதிகபட்சமாக 510 எக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

டிச. 11 முதல் 15 வரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பணம்பட்டியில் அதிக மழை பதிவானது. இதில் உசிலம்பட்டி செல்லம்பட்டியைச் சேர்ந்த 644 சிறு, குறு விவசாயிகள் 408 எக்டேரில் பயிரிட்டிருந்த பூக்கும், பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. சேதத்தின்மதிப்பு ரூ.69.38 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 77 பிற விவசாயிகளின் 101.5 எக்டேர் நெற்பயிர்களும் சேதமடைந்தது. செல்லம்பட்டியில் மட்டும் 771 விவசாயிகளின் 510 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ.86.63 லட்சம்.

மக்காச்சோளம், கரும்பு பிற பயிர்களுடன் 640 எக்டேர் பரப்பளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.ஒரு கோடியே 9 லட்சம் என, இயக்குநருக்கு தெரிவித்துஉள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement