இஸ்ரோ நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!
சென்னை; இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்துக் கூறி உள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவராக நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். வரும் (ஜன.) 14ம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமாலை வாழ்த்துக் கூறி உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;
இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட நாராயணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் புகழ்பெற்ற விஞ்ஞானி. இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
சந்திரனின் தென்துருவ பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுத் தந்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.