புடலை விலை அதிகரிப்பு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புடலங்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களாக விளைச்சல் நன்றாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ புடலங்காய் ரூ.10 க்கு விற்பனையானது. தற்போது பெய்த மழையால் செடியிலிருந்த பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டது.
இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்ததால் புடலங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ புடலங்காய் ரூ.25க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement