போலீஸ் செய்திகள்....

திருநங்கைகள் மூவர் கைது

ஒட்டன்சத்திரம்: பழநியை சேர்ந்த பாரதி, அனல்யா,ஒட்டன்சத்திரம் ராசாத்தி ஆகியோர் திருநங்கைகள் ஆவர். இவர்கள் ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகே பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்,பொதுமக்களிடம் ஆசிர்வாதம் செய்வது போல் நடித்து பணம் வசூல் செய்வது, பணம் தராத நபர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

புகையிலை விற்ற இருவர் கைது

நத்தம்: நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் 65. என்பவரை கைது செய்த நத்தம் போலீசார் அவரிடமிருந்து 118 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதைப்போல செந்துறையில் சுப்பிரமணியை கைது செய்து அவரிடமிருந்து 31 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சூதாடிய 6 பேர் கைது

வடமதுரை: காணப்பாடி மாலப்பட்டி செங்கல் சூளையில் சூதாடிய 5 பேரை பிடிக்க வடமதுரை போலீசார் முயற்சிக்கையில், மாலப்பட்டி சடையாண்டி 52 மட்டும் சிக்கினார். தப்பியோடிய மாலப்பட்டி பெருமாள், ஜெயபாண்டி, நரிவிலாபட்டி புருஷோத்தமன், புதுப்பட்டி கண்ணனை தேடுகின்றனர். பெரியகோட்டையில் சூதாடிய மூர்த்தி 49, பழனியப்பன் 55, ராஜா 37, பிச்சைமுத்து 40, பழனிச்சாமி 66 ஆகியோரை கைது செய்தனர். பணம் ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.

மூவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: பொன்மாந்துறை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜா 27. மேட்டுப்பட்டி லியோ சார்லஸ் 32,பன்னீர்செல்வம் 28 ஆகியோர் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றகாவலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement