கன்னிமலையை கலங்கடித்த காட்டு யானைகளால் அச்சம்

மூணாறு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று பகலில் காட்டு யானைகள் பல குழுக்களாக நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. அதனால் தொழிலாளர்கள் இடையே அச்சம் அதிகரித்த நிலையில், மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட்டில் வசிக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழித்து வருகின்றனர்.

தொடரும் பலி



கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கடந்தாண்டு பிப்.26ல் இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற தொழிலாளி சுரேஷ்குமார் 46, காட்டு யானை தாக்கி பலியானார். அதன் பிறகு தொழிலாளர்கள் பகலில் கூட அச்சத்துடன் நடமாடி வரும் நிலையில் காட்டு யானைகளும் பல குழுக்களாக நடமாடுகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் பகலில் தேயிலை தோட்ட எண் 12ல் ஒரு குட்டியானை உள்பட 2 யானைகள் வெகு நேரம் நடமாடின. அது போன்று 2 குழுக்களாக வேறு யானைகள் நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சத்துத்துடன் வசித்து வந்தனர்.

Advertisement