பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்
சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க., 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (18)
visu - tamilnadu,இந்தியா
08 ஜன,2025 - 16:35 Report Abuse
admk தலைமை நியாயமாக தவறு செய்தவர் எங்கள் கட்சி நிர்வாகி அவரை கட்சியை விட்டு நீக்குகிறோம் என்று அறிவித்து விட்டனர் தி மு க போல குற்றவாளி எங்கள் கட்சிக்காரர் இல்லை என்று ஏமாற்ற வில்லை
0
0
Reply
வால்டர் - Chennai,இந்தியா
08 ஜன,2025 - 16:23 Report Abuse
அன்னான் அண்ணாமலை வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது.
0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
08 ஜன,2025 - 14:53 Report Abuse
குஜராத் கலவரத்தில் பாலியல் குற்றவாளிகளை விடுவித்து , அவர்களை பாறை, தம்பட்டை அடித்து, லட்டு கொடுத்து வரவேற்றார்கள், அப்போ கேட்கவில்லையா? யோகினா பயமா?
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
08 ஜன,2025 - 13:44 Report Abuse
யாரங்கே... ஒரு சாட்டை வாங்கி உடனே அண்ணாமலை க்கு அனுப்புங்கள். போகி அன்னிக்கு சாட்டை அடி நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்.
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
08 ஜன,2025 - 13:22 Report Abuse
அந்த சார் யாரு, அந்த சார் யாரு ன்னு கேட்டுக்கிட்டே இருந்தோம் ..... எங்க கட்சியிலேயே இப்படி சார் இருக்கார் ன்னு நாங்க பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டோம் ... எங்களை நம்புங்க மக்களே ....
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
08 ஜன,2025 - 12:47 Report Abuse
கண்துடைப்பு நாடகம்
0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
08 ஜன,2025 - 12:32 Report Abuse
மூஞ்ச பாத்தாலே தெரியுது ,
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
08 ஜன,2025 - 11:23 Report Abuse
இவரு தான் அந்த சாரா? எல்லா ஸ்டிக்கர்களையும் உரிச்சி எடுத்து குப்பைல போட்டுடுங்கோ
0
0
Reply
ஆரூர் ரங் - ,
08 ஜன,2025 - 10:47 Report Abuse
அந்த தா கிருஷ்ணன் படுகொலை வழக்கு என்னாச்சு? அதனைப் பற்றி தி.மு.க மேலிடம் கூட வாய்திறப்பதில்லை. அஞ்சலி கூட்டம் படத்திறப்பு கூட நடத்தப்படவில்லை. மேலும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கழக ஆட்களை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலிருந்து கட்டாயப்படுத்தி விடுவித்த திமுக எம்எல்ஏ மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
0
0
Reply
அப்பாவி - ,
08 ஜன,2025 - 10:33 Report Abuse
நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனும்டா - வடிவேலு ஒரு மேதை.
0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement