தனியார் நிறுவன ஊழியர் மாயம்

திருபுவனை: கண்டமங்கலம் அடுத்த ரஜபுத்திரபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 36; திருபுவனையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சரவணனின் நகைகளை, அவரது மூத்த சகோதரி வாங்கி அடகு வைத்துள்ளார். நகைககைள மீட்டுத்தருமாறு சரவணன் கோரி வந்த நிலையில்,10 மாதங்கள் கடந்தும் அவரது சகோதரி மீட்டுத்தராததால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடந்த 21ம் தேதி, வீட்டில் இருந்து தனது சகோதரி வீட்டிற்கு சென்று நகைகளை மீட்டு, வாங்கி வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மனைவி அன்னபூரணி கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை தேடி வருகின்றனர்.

Advertisement