போதையில் மதுக்கடை சூறை: காரைக்காலில் 5 பேர் கைது
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் மதுக்கடையை சூறையாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், விழிதியூர் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில், திட்டச்சேரியை சேர்ந்த கணேசன் என்பவர் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இக்கடையில் நேற்று முன்தினம் செல்லுார் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த குமரன், 32, மற்றும் அவரது நண்பர் குமரேசன், 28, ஆகியோர் மது அருந்தினர்.
அவர்களிடம் கணேசன், மதுவுக்கு 104 ரூபாய் பில் கொடுத்தார். அவரிடம் குமரன் 500 ரூபாய் கொடுத்தார். மீதி தொகையை கணேசன் திருப்பி கொடுத்தார். ஆனால் 200 ரூபாய் தரவில்லை என, குமரன் மற்றும் குமரேசன் ஆகியோர் தகராறு செய்தனர்.
கணேசன் சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கட்சிகளை காட்டியபோது இருவரும் திருப்தி அடையவில்லை. அவர்கள், தனது நண்பர்களான அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 28; இளையராஜா, 28; கலைமாறன், 35, ஆகியோரை வரவழைத்து, மது பாட்டிலால் கணேசனை தாக்கினர். இவர் ஒதுங்கியதால் கடையில் உள்ள மதுபாட்டில்கள், ஸ்கேனர் போடு உள்ளிட்ட 2,300 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சோதமடைந்தன.
இதனால், ஊழியர்கள் கடையை முடிய நிலையில், பாரில் வேலை செய்த வினோத்குமார், ஜான்ரவி ஆகியோரை தாக்கினர். காயம் அடைந்த இருவரும் அரசு மருந்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த நிரவி சப் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தகராறு செய்த குமரேசன், இளையராஜா, கலைமாறன், கார்த்திகேயன், குமரன் ஆகியோரை கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைந்தனர்.