ரேஷனில் மீண்டும் பொது விநியோக திட்டம்: இந்திய கம்யூ., கோரிக்கை

புதுச்சேரி: ரேஷன் கடைகளில் பொதுவிநியோக திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என,இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் திறந்து பொது விநியோக திட்டத்தின் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும். நேரடி மானிய திட்ட முறை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

ஆனால், இதுவரை ரேஷன் கடைகள் திறக்கவில்லை. பொது வினியோக திட்டமும் துவங்கவில்லை. பொங்கல் பண்டிகைக்கான உணவுப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக ரூ.750 தொகை, நேரடி மானிய முறையில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது மக்கள் நலத்திற்கு முற்றிலும் எதிரானது.

பொங்கல் தொகுப்பை, பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்னை. மீண்டும் மீண்டும் ஏன் ஏமாற்று வேலையை செய்கிறார்கள். எனவே நேரடி மானிய முறையில் ரூ.750 வழங்கும் திட்டத்தை கைவிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement