பகல் நேர பெங்களூரு பயணத்திற்கு பி.ஆர்.டி.சி.,யில் கட்டணம் குறைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி - பெங்களூரு இடையிலான பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பகல் நேர பஸ்சின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி - பெங்களூரு இடையே காலை 10:15 மணி மற்றும் இரவு 11:00 மணிக்கும், பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு பகல் 12:30 மற்றும் இரவு 9:30 மணிக்கு பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணம் ரூ. 485.

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பகல் நேர பஸ்களுக்கு குறைந்த கட்டணமும், இரவு நேர பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறை உள்ளது. இதனால் பெங்களூருக்கு இயக்கப்படும் பகல் நேர பி.ஆர்.டி.சி., பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, பகல் நேர பயண கட்டணம் குறைக்க கவர்னரிடம் அனுமதி பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் உத்தரவுப்படி, பெங்களூருக்கு இயக்கும் அல்ட்ரா டீலக்ஸ் பி.ஆர்.டி.சி., பஸ்களில் பகல் நேர பயணத்திற்கு சாதாரண பஸ் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு காலை 10:15 மணிக்கு புறப்படும் பஸ் மற்றும் பெங்களூருவில் பகல் 12:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும் பஸ் கட்டணம், ரூ. 485ல் இருந்து ரூ. 390 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. வழியில் ஏறி இறங்கும் பயணிகளுக்குமான கட்டணமும் சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.

Advertisement