புத்தகக்காட்சி/ நுால் அறிமுகம்
'வியனுலகு வசதியும் பெருமலர்'
ஆசிரியர்: இளங்கோ கிருஷ்ணன்
பக்கம்: 144, விலை: ரூ. 180
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
பசியின் கதை, மரணத்தின் பாடல்கள், பேரன்பின் வேட்டை நிலம், நீர்மையின்பிரதிகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன.இவை, அவலங்களையும்,அவஸ்தைகளையும் சொல்லும் தருணங்களை உணர்த்துகின்றன. அதே சமயம் நம் இருப்பின் மன எழுச்சியையும், அமைதியையும் குறியீட்டுத் தன்மையாக்கும் நிகழ்வும் இதில் நடந்திருக்கிறது.
----நலம் தரும் யோகம்
ஆசிரியர்: பி.கே.எஸ்.ஐயங்கார்
பக்கம்: 456, விலை: ரூ. 295
வெளியீடு: காலச்சுவடு
யோகாசனத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர் பி.கே.எஸ்.ஐயங்கார். உடலையும் மனதையும் பலப்படுத்தவல்ல யோகாவைப் பற்றி அவர் எழுதிய 'ஆரோக்கிய யோகம்' எனும் நுாலின் தமிழாக்கமே இந்நுால். இதில், ஆசன பயிற்சிகளும், விளக்கப்படங்களும் உள்ளன.