ஒரே நாளில் 8 மாவட்டங்களில் 8 அதிகாரிகளுக்கு குறி! கர்நாடகாவில் லோக் ஆயுக்தா ரெய்டு

பெங்களூரு; கர்நாடகாவில் 8 அரசு உயரதிகாரிகளை குறி வைத்து 8 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அமைப்பினர் ரெய்டில் இறங்கி உள்ளனர்.



பெங்களூரு போக்குவரத்து இணை கமிஷனர் .ஷோபா, கடூர் சுகாதாரத்துறை அதிகாரி உமேஷ், பிதர் பகுதி நிலத்தடி நீர்பாசனம் மற்றும் நீர் மேம்பாட்டு அதிகாரி ரவிந்திர என மொத்தம் 8 முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடக்கிறது.


இந்த அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள் இல்லங்கள் மாண்டியா, பிதர், பெலகாவி என 8 மாவட்டங்களில் உள்ளன. இந்த 8 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து அதிரடி ரெய்டில் இறங்கி இருக்கின்றனர்.


அதிரடி சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்கம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி இதே போன்று 12 அரசு அதிகாரிகளை குறி வைத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லோக் ஆயுக்தாவினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.


அதன் பின்னர் தற்போது தான் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான ரெய்டில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement