ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு: டில்லியில் காங்., தருது வாக்குறுதி

15

புதுடில்லி: டில்லியில் ஆட்சி அமைத்தால், ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.

டில்லி சட்டசபைக்கு பிப்., 5ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 1.6 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். பிப்.,08 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது.


இந்நிலையில், நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் கூறியதாவது: டில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ரூ.25 லட்சம் அளவுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும். காங்கிரசுக்கு வெற்றியை கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement