காரில் குழந்தை வீடியோ பார்க்க இப்படியா? வைரலான வீடியோ; ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ரியாக்ஷன்

1

புதுடில்லி: காரில் இருந்தபடி, குழந்தை டேப்லெட்டில் வீடியோ பார்ப்பதற்காக பெற்றோர் செய்த செயலை பார்த்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆச்சர்யப்பட்டு போனார்.


பொதுவாக, தொலைதூர பயணங்களின் போது காரில் குழந்தைகளை தொந்தரவு செய்யாமல் அமர்ந்திருக்க, அவர்களுக்கு செல்போனை கொடுத்து, அதில் வீடியோ பார்க்கச் செய்வதை பெரும்பாலான பெற்றோர்கள் செய்து வருவதை நாம் கண்டு வருகிறோம்.


அப்படி, ஒரு பெற்றோர், தன்னுடைய குழந்தை, டேப்லெட்டில் வீடியோ பார்க்க வசதியாக, ஜிப் வைத்த பிளாஸ்டிக் கவரை, டிரைவர் இருக்கையில் சிக்க வைத்து, அதில் டேப்லெட்டை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்த வீடியோவை முன்னணி தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார். மேலும், அந்த வீடியோ பகிரிந்த அவர், 'இது போன்ற எளிமையான ஐடியாவை வெளிநாட்டுக்காரர்கள் காப்பி அடித்து விடப் போகிறார்கள்,' என்று நகைச்சுவையாக கூறினார்.


அவர் தனது பதிவில் 'ஜுகாத்' எனும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். அந்த வார்த்தைக்கு 'குறைந்த செலவில் பிரச்னையை தீர்த்தல்', என்று பொருள். ஆனால், இந்த வார்த்தையை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பெரும் விவாதத்தையே நடத்தி வருகின்றனர்.

Advertisement