திருவிழாவில் மிரண்ட யானை: கூட்டத்தில் சிக்கிய 17 பேர் காயம்

7

மலப்புரம்: மலப்புரத்தில் நடந்த திருவிழாவில், யானை கூட்டத்தில் இருந்த ஒருவரை துாக்கி சுழற்றியடித்தது. கூட்டத்தில் இருந்த 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.


கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூரில் புதியங்கடியில் நேற்று இரவு நடந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு யானை மிரண்டது. கூட்டத்தில் இருந்த ஒருவரை துாக்கி சுழற்றியது. சிதறி ஓடியதில் கூட்டத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர். யானை சுழற்றி அடித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில்,

திரூரில் நடந்த புதியங்கடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். திருவிழாவில் குறைந்தபட்சம் ஐந்து யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காட்சிகள் காட்டுகின்றன. திடீரென்று, ஐந்து யானைகளில் ஒரு யானை மிரண்டது, கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த ஒருவரை, ஸ்ரீகுட்டன் என்று பெயரிடப்பட்ட இந்த யானை, தூக்கி சுழற்றி தூக்கி எறிகிறது.

இந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

யானை துாக்கி எறிந்த நபர், கொட்டக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீதியின் காரணமாக கூட்ட நெரிசலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். யானையை கட்டுக்குள் கொண்டுவர சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.

Advertisement