டில்லியில் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாயுடன் போலீஸ் சோதனை

புதுடில்லி:டில்லியில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மிரட்டல் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறியதாவது:

இன்று காலை 11.17 மணிக்கு டில்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் உள்ள தாகூர் சர்வதேச பள்ளியிலிருந்தும், காலை11.40 மணிக்கு லேடி ஸ்ரீராம் கல்லுாரி(எஸ்.ஐ.சி) இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.இதனை அடுத்து, இரு கல்வி நிறுவனங்களுக்கும் மோப்ப நாயுடனும் ஒரு குழுவும் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழு ஆகிய இரண்டும் சென்றன. இந்த குழுக்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

Advertisement