முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்: ரமேஷ் பிதுரிக்கு பிரியங்கா கண்டிப்பு

2

புதுடில்லி: முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள், என்று பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதுரி கூறியதற்கு பிரியங்கா எம்.பி., கண்டித்துள்ளார்.

டில்லியின் கல்காஜி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.,சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், கல்காஜியின் சாலைகளை பிரியங்காவின் கன்னங்களைப் போல மென்மையாக்குவேன் என்று கூறினார். ஹேமமாலினியின் கன்னங்கள் போல் பீகாரில் சாலைகள் அமைப்பதாக லாலு கூறியிருந்தார் ஆனால் அவரால் முடியவில்லை. ஆனால் கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்காவின் கன்னங்கள் போல் ஆக்குவோம் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.இதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிதுரி, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, இன்று பா.ஜ., முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரியின் கன்னங்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்துள்ளார்.இது "கேலிக்குரியது" என்றும் டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தார்.

பிரியங்கா கூறியதாவது:

டில்லியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற பொருத்தமில்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.அவரகளின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடாது.

பிதுரி தனது சொந்த கன்னங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது ஒரு அபத்தமான கருத்து. இதெல்லாம் தேவையற்றது.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.

Advertisement