ஹாக்கி லீக் : தமிழக அணி வெற்றி
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 6-5 என கோனாசிகா அணியை வீழ்த்தியது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், கோனாசிகா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் தமிழக அணி 6-5 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. தமிழக அணிக்கு ஜிப் ஜான்சென் 'ஹாட்ரிக்' (19, 33, 50வது நிமிடம்), அபரன் சுதேவ் (15வது), நாதன் எப்ராம்ஸ் (55வது), கார்த்தி செல்வம் (59வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கோனாசிகா அணி சார்பில் அராய்ஜீத் சிங் 2 (5, 7வது நிமிடம்), நிக்கின் (39வது), ஸ்ட்ரூவான் வாக்கர் (43வது), திமோதி கிளமென்ட் (58வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.
இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி உட்பட 9 புள்ளிகளுடன் தமிழக அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement