காலிறுதியில் மாயா ரேவதி

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி முன்னேறினார்.
டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரான்சின் மனான் பேப்ளரை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-0 என வென்றார் ரேவதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர் 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரேவதி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் இன்று ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவாவை சந்திக்க உள்ளார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரேவதி, பிரான்சின் மார்கட் ஜோடி, 6-4, 4-6, 10-7 என ரஷ்யாவின் எக்டரினா, அனா ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement