இடைத்தேர்தல் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று, கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். மாவட்ட அளவில் பொதுமக்கள், பல்-வேறு அமைப்பினர், தங்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்-களை வழங்கி தீர்வு பெறுவர்.


தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளும் வரை, மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகி-றது.


மீண்டும் இக்கூட்டம் நடத்தப்படுவது பற்றி பின்னர் அறிவிக்கப்-படும் என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

Advertisement