மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ''யு.ஜி.சி., விதிமுறைகள் தொடர்பாக தமிழர்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம், வெல்வோம்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை நீக்கி, புதிய விதிமுறைளை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு சம்பளம்தருவது மாநில அரசு; உதவித்தொகை - ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள். இவ்வளவையும் நாங்கள் செய்ய, பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த கவர்னர். இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யு.ஜி.சி., தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?
தமிழகம் உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யு.ஜி.சி., வரைவு அறிக்கை. இதனை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (33)
Vel1954 Palani - ,இந்தியா
09 ஜன,2025 - 22:39 Report Abuse
This is not only for Tamilagam but also for whole India. Why only dmk fearing. Be happy.
0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
09 ஜன,2025 - 22:28 Report Abuse
தமிழகம் உயர்கல்வியில் முதலிடம். பின் ஏன் நீட்டுக்கு எதிர்ப்பு.
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
09 ஜன,2025 - 21:52 Report Abuse
இங்கே பலரும், அவர்கள் பிறந்த நாட்டின் பல்கலைக்கழகங்களில், அவர்களின் வரிப்பணத்தில் இயங்கும்
பல்கலைக்கழகங்களில், யாரோ உள்ளே புகுந்து அதிகாரம் பண்ணிண்டு இருக்கறதைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்க்கமல், பாஜக விற்கு ஆதரவு என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பிறந்த பொன்னாட்டின் கல்வியை யார் யாரோ அபகரிப்பதை ஆதரிக்கிறார்கள்.
0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
09 ஜன,2025 - 21:35 Report Abuse
எந்த மன்றத்திற்கு போனாலும் ஒன்றும் செய்ய முடியாது இரண்டு தடவை கூவிட்டு மறந்து விடுவார்கள்
0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
09 ஜன,2025 - 21:32 Report Abuse
மண்டையில மூளையற்ற தகுதியற்றவன்கள் பொய் பித்தலாட்ட அயோக்கியனுங்க
0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
09 ஜன,2025 - 21:30 Report Abuse
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்படவேண்டும்
0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
09 ஜன,2025 - 21:27 Report Abuse
8000 கோடி:உயர்கல்வி க்கு TN கொடுக்குமாம் , 100 கோடி கேடி அரசு கொடுக்குமாம்.அனால் தலைவர் ஒன்றிய அரசு நியமிக்குமாம் எப்படி சூப்பர் ல
0
0
Reply
ராம் சென்னை - ,
09 ஜன,2025 - 21:10 Report Abuse
முதலில் யூ ஜி சி அறிக்கையை இந்த அரசு படித்து இருக்க மாட்டார்கள். மத்திய அரசு அல்லது மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் அலுவலகம் கொண்டுவரும் எந்த ஆணையும் இந்த திமுக அரசு ஏற்காது மாற்றாக அதை எதிர்க்கும். இதுதான் இவர்கள் செய்யும் அரசியல். எந்த ஆணையும் அலசி, நல்லது கெட்டதை மக்களிடம் எடுத்து செல்வதில்லை.
0
0
Reply
மணியன் - ,
09 ஜன,2025 - 20:56 Report Abuse
அனைத்து மாநிலங்களும் மத்திய திட்டங்களையும் ,சட்டங்களையும் ,திருத்தங்களையும் ஏற்றுக்கொள்கின்றன.தேவை ஏற்பட்டால் மத்திய அரசுடன் சுமுகமாக பேசி தீர்வு காண்கிறார்கள்.தமிழக திராவிட அரசு இந்தளவு மோதல் போக்கை கடைபிடிப்பதால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவார்கள்.
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 ஜன,2025 - 20:51 Report Abuse
ஆபாசப்பேச்சாளர் கூட துணைவேந்தராக வேண்டும் என்பது தீம்க்காவின் கனவு. ஏற்கனவே பாடப்புத்தகத்தில் பொய்களை சேர்த்து கல்வியை குழிதோண்டிப் புதைக்க முயல்கிறார்கள்... தமிழனை மொத்தமாக ஒரு பிச்சைக்கார இனமாக மாற்ற நினைக்கும் முயற்சி ஈடேறாது..
0
0
Reply
மேலும் 23 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement