எச்.எம்.பி.வி.,-வைரஸ் பரவல் எதிரொலி மாநில எல்லையில் மருத்துவ முகாம்
அந்தியூர்: கர்நாடகாவில் இருந்து, பர்கூர் வழியாக அந்தியூர் வரும் மக்க-ளுக்கு, வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்ட்டில், எச்.எம்.பி.வி., -வைரஸ் பரவல் எதிரொலியாக,- சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி வழியாக, தமிழக-கர்நாடகா செல்லும் சாலை உள்ளது. இந்நிலையில், எச்.எம்.பி.வி., -வைரஸ் பரவல் எதிரொலியால், அந்நோயை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலை-மையில், சுகாதாரத்துறையினர் வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்ட் அருகே, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, அதில் பயணம் செய்யும் மக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல், சளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்-பப்படுகிறது.