14 மாதமே இருந்தாலும் தி.மு.க.,- காங்.,கில் போட்டியிட பலருக்கு ஆர்வம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்றாலும், 14 மாதங்களே பதவி என தெரிந்தும், போட்டியிடலாம் என்ற எண்-ணத்தில் காங்., மற்றும் தி.மு.க.,வில் போட்டியிட விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'இடைத்தேர்-தலில் இண்டியா கூட்டணியில் காங்., வேட்பாளர்தான் போட்டி-யிடுவார்' என, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை அறி-வித்துள்ளார். இருந்தாலும், தி.மு.க.,வில் டி.ஆர்.பாலு தலைமை-யிலான ஒரு குழுவும், காங்., உடன் பேசி வருகிறது.
இதுபற்றி, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2021, 2023 என காங்.,க்கு வாய்ப்பு வழங்கி, தி.மு.க.,வே செலவும், வேலையும் செய்து வெற்றி பெற செய்தோம். 2021ல், 8,523 ஓட்டு, 2023ல் 66,233 ஓட்டு பெற்று வெற்றியை பெற்று தந்-துள்ளோம். தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்., - இரு கம்யூ.,க்கள், விடுதலை சிறுத்தைகள் என அனைவரும், ஆட்சி முதல் முதல்வர் வரை விமர்சித்தும் வருகின்றனர். இச்சூ-ழலில் கடந்த தேர்தல் போல, கூட்டணியினர் ஒத்துழைப்பும், மக்கள் மனநிலையும் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, காங்., வேட்பாளரை நிறுத்துவதை விட, தி.மு.க.,வே நின்றால் கூடுதலாக செலவிடும், அக்கரை எடுத்து கூடுதல் ஓட்-டுடன் வெல்வோம். அந்த வெற்றி, 2026 தேர்தலுக்கு உரம் சேர்க்கும். காங்., மீண்டும் போட்டியிட்டால், தி.மு.க.,வினர் சோர்வடைந்து, ஓட்டு வித்தியாசம் குறையும். இருந்தாலும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்.,ல் மறைந்த இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் சம்பத், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ்ராஜப்பா, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜய-குமார் என பட்டியல் நீள்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும், காங்., தலைவர்கள் சிலர் பரிந்துரையுடன், முயன்று வருகின்-றனர்.
மறுபுறம் தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்ல-பொன்னி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன முன்னாள் தலைவர் குறிஞ்சி சிவகுமார் என பலரும் கட்சியின் முன்னணி நிர்வா-கிகள், அவர்கள் சார்ந்த ஜாதி அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் மூலமும் சீட் பெறும் முயற்சியில் உள்ளனர்.
போட்டியிட்டு வென்றாலும், 14 மாதமே பதவியில் இருக்க போவதாலும், 2026ல் மீண்டும் 'சீட்' கேட்க 'சிட்டிங் எம்.எல்.ஏ.,' என்ற துருப்பு சீட்டு இருக்கும் என எண்ணுகின்-றனர். இச்சூழலில் சென்னையில் உள்ள இம்மாவட்ட அமைச்சர் முத்துசாமி, சட்டசபை கூட்டத்துக்கு பின் ஈரோடு திரும்புகிறார். கடந்த இடைத்தேர்தலைப் போல, முன்னதாகவே பிரசாரத்தை துவங்க உள்ளார். இவ்வாறு கூறினர்.