கோடான கோடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்
கோபி: ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்துக்காளியம்மன் கோவில் எப்போது அமைக்கப்பட்டது என்ற சான்று எதுவும் கிடையாது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு மேலாக, சரித்திர புகழ் பெற்ற கோவிலாக இருக்க வேண்டும்.
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால், நான்கு திசையிலும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்-துள்ளன. இதன் மையப்பகுதியில் கற்கோவில் மண்டபம் அமைந்-துள்ளது. மண்டபத்தின் உட்பகுதியில், வழுவழுப்பான கருங்கற்க-ளாலான அழகிய கர்ப்ப கிரகத்தில், அம்மை அருள்வடிவாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்-கிறார். வடக்கு வாயிலின் முன்பு, தடப்பள்ளி வாய்க்கால் அமைந்து வளம் பெருக்குகிறது. மேற்கே கல்யாண விநாயகர் எழுந்தருளி கன்னியருக்கும், காளையருக்கும் திருமணம் கைக்-கூட அருள் பாலிக்கிறார். மேற்கு வாயிலில் நுழைந்தால், வலப்-பக்கத்தில் அம்மைக்கு நீராட்ட, நீர்சுரக்கும் அகன்ற கிணறு அமைந்துள்ளது.
மேற்கு வாயிலின் வழியே கோவில் உள்ளே நுழைந்தால் இடப்பக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அதையடுத்து சப்த கன்னியர் கோவில் கொண்டுள்ளார். கொண்-டத்துக்காளியம்மன் குண்டத்தின் துவக்கத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தை வழிபட்டு, கொண்டத்து திருநீற்றை அணிந்து கொண்டு, அம்மையின் கோவிலுக்கு நுழையும் முன், சிங்கவா-கனம் காட்சியளிக்கும். சிங்கவாகனம் அமைந்திருக்கும், அம்-மையின் திருக்கோவில், வடக்கு வாயிலையும், கிழக்கு வாயி-லையும் இணைக்கும், சுற்று மண்டபம் அமைந்துள்ளது. அதில், 28 துாண்கள் உள்ளன. அந்த துாண்களில் பல சிற்பங்கள் செதுக்-கப்பட்டுள்ளது.
கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளி கோடான கோடி பக்தர்களுக்கு, கொண்டத்துக்காளியம்மன் அருள்பாலிக்கிறார். அம்மையை அடி-பணிந்து வணங்கி, இடம் இருந்து வலமாக வந்தால், கர்ப்ப கிர-கத்தின் இடப்பக்கம் ஐம்பொன்னாலான உற்சவ மூர்த்தியாகிய சின்னம்மன் சன்னதி உள்ளது. அம்மனை வணங்கி வலம் வந்து, மீண்டும் அம்மையை வணங்கி கிழக்கு வாயில் வழியாக, வெளியே வந்து வெளிமண்டபத்தில் அமர்ந்து செல்லலாம்.
தினமும் ஆறு கால பூஜை
கோவிலில் தினமும் காலை 6:00 மணிக்கு பூஜை, 9:00 மணிக்கு சந்தி பூஜை, 10:30 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, 5:00 மணிக்கு மாலை பூஜை, இரவு 7:00 மணிக்கு அர்த்த சாம பூஜை என, மொத்தம் ஆறு கால பூஜை நடக்கும் கோவிலாக திகழ்கிறது.
எட்டு கைகளுடன் வீற்றிருக்கும்
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மகிஷாசுரனை வதம் செய்து, சாந்தரூபமாக காட்சி அளிக்கிறார். அம்பாள் சிரித்த முகமாக, பக்-தர்கள் வேண்டும் வரத்தை அள்ளித்தரும் வகையில் காட்சி தரு-கிறார். வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டிருக்-கிறார். மகிஷாசுரனின் தலையை, அம்மனின் இடது கால், பூமியில் அழுத்தியிருக்கிறது. தேவியின் வலக்கை ஏந்தியிருக்கும் சூலாயுதம், அவரது மார்பை துளைக்கிறது. அன்னையின் எட்டு கரங்களும், எட்டு விதமான பொருட்களை கொண்டது. வலப்-புறம் உள்ள நான்கு கரங்களும் மேலிருந்து கீழாக, சூலாயுதம், டமாரம், கத்தி, கிளி வடிவில் வேதாளம் ஆகியவற்றை கொண்டி-ருக்கின்றன. இடப்புறம் நான்கு கரங்களிலும், மேலிருந்து கீழாக அக்னிச்சட்டி, கேடயம், மணி, கபாலம் ஆகியவை உள்ளது.
குண்டம் தேர்த்திருவிழா
ஒவ்வொரு ஆண் டும் மார்கழி திங்கள் இறுதி வாரத்தில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கும். மார்கழி திங்கள் இரண்டாவது வாரம் முடிவில், அதாவது வியாழன் இரவு 9:00 மணிக்கு மேல் அபி ேஷக ஆராதனைகள் செய்து, பூச்சாற்றுதல் என்னும் பூச்சொ-ரிதல் விழா நடக்கிறது. அன்று முதல், 15 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்குதல் வேண்டும். பூச்சாற்று நாளில் இருந்து, 12ம் நாள் நடக்கும், சந்தனக்காப்பு அலங்காரம் கண்கொள்ளா காட்சி-யாக அமைந்துள்ளது. 14ம் நாள் புதன் கிழமை, திரளான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மைக்கு படைத்து மகிழ்வர். அதேபோல் அம்மன் சன்னதி எதிரே, ஐந்து அடி அக-லமும், 50 அடி நீளமும் கொண்ட திருக்குண்டத்தில், ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.