ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள, கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், தீவிர வாகன தணிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தல் ஓட்டுப்ப-திவு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமு-றைகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளை-யத்தில், போலீசார் சோதனை சாவடி உள்ளது.


இது நாமக்கல்-சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. வழக்கமாகவே இங்கு, 24 மணி நேரமும் போலீசார் கண்கா-ணிப்பு, சோதனை பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகி உள்ளது. எனவே, போலீசார் தீவிர வாகன தணிக்கையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். பணம், பரிசு பொருட்கள், ஆயுதங்கள், மது-பான வகைகள், வெளியூர் ஆட்கள் வந்து செல்வது உள்ளிட்ட-வற்றை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
சோதனை சாவடியில் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்-ளது. மூன்று ஷிப்டுகளாக போலீசார் வாகன தணிக்கையை மேற்-கொள்வர். சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மேலும் கூடுதலாக சோதனை சாவடிகள் ஓரிரு நாட்களில் அமைக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement