'கூச் பெஹர் டிராபி' : தமிழக அணி அபாரம்

ஆமதாபாத்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில் தமிழக அணியின் கிஷோர், அம்ப்ரிஷ், ஜெயந்த் அரைசதம் கடந்தனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான 'கூச் பெஹர் டிராபி' நடக்கிறது. ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் தமிழகம், குஜராத் அணிகள் விளையாடுகின்றன. குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 75/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு கிஷோர் (54), அம்ப்ரிஷ் (85) கைகொடுத்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தது. அடுத்து வந்த ஜெயந்த், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவருக்கு பிரவின் ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 358 ரன் எடுத்திருந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்திருந்த ஜெயந்த் (79), பிரவின் (25) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் சார்பில் கிலான் படேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement