ஒலக்கூர் பி.டி.ஓ.,அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திண்டிவனம்: ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனம் அருகே சாரத்திலுள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சிகளுக்கு ரூபாய் 27.75 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு கலைஞரின் விளையாட்டு உபகரணங்களையும், ரூபாய் 8.18 லட்சம் மதிப்பீட்டில் நுாறு நாள் வேலை பணியாளர்களுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் சிவகுமார், சரவணகுமார், மேலாளர் ஏகாம்பரம்,தி.மு.க.,பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்முருகன்,மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.