தொழிலாளர் நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். இதில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தற்போது வரை வழங்கிய விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்தாண்டு டிசம்பர் வரை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிந்துள்ள 33,703 பயனாளிகளுக்கு ரூ.21.72 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் தடையின்றி வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தவும், நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்திட வேண்டும் என கலெக்டர் கூறினார்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை விரை வாக வழங்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றி கலெக்டர் பழனி கூறினார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் பதிவை5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்வதற்கான நடவடிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் திட்டங்களை அறியும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.

இதில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement