பாம்ப்ரி ஜோடி கலக்கல்

ஆக்லாந்து: நியூசிலாந்தில் ஏ.டி.பி., கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் ஆல்பானோ ஒலிவெட்டி ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற பிரிட்டனின் ஜூலியன், லியாடு ஜோடியை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரம், 21 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-4, 12-10 என வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement