பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, ராஜகணபதி தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் தட்சணாமூர்த்தி, 20. ராமலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., அக்ரி முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு, கல்லுாரிக்கு ஸ்பிளண்டர் பைக்கில், ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.
மாசிநாயக்கன்பட்டியில் சென்றபோது, சேலத்தில் இருந்து வேலுார் நோக்கி சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார். அப்போது அங்கிருந்த வேகத்
தடையில் ஏறியபோது நிலைதடுமாறி தட்சணாமூர்த்தி விழுந்தார். அதில் அந்த பஸ்சின் பின்புற சக்கரத்தில் தலை சிக்கி நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement